ஹொரணை, மொரகாஹேன பிரதேசத்தில் யானை மேற்கொண்ட தாக்குதலில் குறித்த யானையின் பாகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மொரகாஹேன, கன்னங்கர பிரதேசத்தில் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யானையின் தாக்குதலில் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பாகனே இவ்வாறு உயிரிழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.