113 ஆசனங்கள் இருக்குமாயின் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாதென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

கினிகத்தேனை பிரதேசத்தில் வாழும் மக்கள் மத்தியில் கைத்தொழில்களை அபிவிருத்தி செய்யும் வகையில் இன்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸவின் அழைப்பின் பேரில் வருகைதந்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் தெரிவு செய்யப்பட்ட மக்களிடம் விசேட கலந்துரையாடல் ஒன்று கினிகத்தேனை கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

கூட்டத்தின் பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

1948 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு பின் இந்த நாட்டில் இரண்டு கட்சிகள் ஒன்றிணைந்து நல்லாட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்கியிருக்கின்றமை வரலாற்றிற்குரியது.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தினை இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மக்களின் பாரிய அர்ப்பணிபுடன் உருவாக்கப்பட்டது.

இரு கட்சிகளை சார்ந்த இரு தலைவர்கள் உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கத்தில் அடிமட்டத்திலுள்ள ஒரு சிலரின் கருத்துவேறுபாடு காரணமாக குழப்ப நிலைமைகள் உருவாக்கபடுகின்றது. புதிய அரசியல் அமைச்சின் ஊடாக அரசாங்கத்தை தொடர்ந்தும் கொண்டுசெல்ல கூடிய வாய்ப்புகள் உள்ளது.

நாளரை வருடத்திற்கு பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இருந்தும் தொடர்ந்தும் இந்த அரசாங்கத்தை வழிநடத்திச் செல்ல இரு தலைவர்களும் உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.