(பா.ருத்ரகுமார்)

சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்பில் எந்தவித புரிதலும் இன்றியே பொதுமக்களால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் தமது கடமையை செவ்வனே நிறைவேற்றி வருவதால் அதனால் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினர் ஆத்திரமடைந்து வீண்பழி போட முற்படுவதாக பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அரச சட்டத்தரணி மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி குற்றசாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மூலம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தின் இரண்டாம் நிலை அதிகாரியான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.