சப்­ர­க­முவ, கிழக்கு, வட­மத்­திய மாகா­ண­ச­பை­களின் ஆயுட்­காலம் இன்னும் சில மாதங்­களில் முடி­வுக்கு வரு­கி­றது. இந்த சபை­க­ளுக்­கான தேர்­தல்கள் ஒத்­தி­வைக்­கப்­பட வேண்­டு­மென்ற 20ஆம் திருத்த யோச­னையை  கைவிட வேண்டும் என்றும், தேர்­தல்கள் ஒத்­தி­வைக்­கப்­ப­டாமல் நடத்­தப்­பட வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி எடுத்­துள்ள முடி­வு­களை நாம் வர­வேற்­கிறோம் என ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணி-­, தமிழ் முற்­போக்கு கூட்­டணி தலை­வரும், தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரிவித்­துள்ளார். 

அந்த அறிக்­கையில்  மேலும் கூறி­யுள்­ள­தா­வது,              

இந்த ஒத்­தி­வைப்பு அவ­சி­ய­மற்­றது. ஒத்­தி­வைக்க அர­சி­ய­ல­மைப்பை திருத்த வேண்டும். இது நாட்டில் தேவை­யற்ற பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்தும். அதை­விட புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்டு வரலாம். அதற்கு இன்னும் சிறிது காலம் எடுக்கும். ஆகவே  உரிய வேளையில் சப்­ர­க­முவ, கிழக்கு, வட­மத்­திய மாகா­ண­ச­பை­களின் தேர்­தல்­களை நடத்­து­வதே சாலச்­சி­றந்­தது.

ஆனால், அதை அவ­சர அவ­ச­ர­மாக புது ஒரு தேர்தல் முறை­மையை அறி­முகம் செய்து நடத்த முடி­யாது. உள்­ளூ­ராட்சி சபைகள் தொடர்பில் நாம் இப்­போது ஏற்­றுக்­கொண்­டுள்ள புதிய கலப்புத் தேர்தல் முறைமை ஒரு­முறை பரீட்­சித்து பார்க்­கப்­பட வேண்டும். எனவே உள்­ளூ­ராட்சி சபைகள் தேர்­தல்கள் புதிய முறை­மையின் கீழ் முதலில் நடத்­தப்­பட வேண்டும். அதை­ய­டுத்து அதிலுள்ள நடை­முறை சிக்­கல்­களை கணக்கில் எடுத்து, உரு­வாக்­கப்­படும் புதிய மாகா­ண­சபைத் தேர்தல் சட்­டத்தின் கீழ் மாகா­ண­சபை தேர்­தல்கள் நடத்­தப்­பட வேண்டும். அதை இப்­போது செய்ய முடி­யாது.

ஆகவே இப்­போது நடத்­தப்­ப­ட­வுள்ள சப்­ர­க­முவ, கிழக்கு, வட­மத்­திய மாகா­ண­ச­பை­களின் தேர்­தல்கள், மாகா­ண­சபை தேர்­தல்கள் தொடர்பில் இப்­போதும் நடை­மு­றையில் உள்ள பழைய விகி­தா­­சார முறை­மையின் கீழேயே நடத்­தப்­பட வேண்டும். இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்3 கூட்டமைப்பு பொது செயலாளர் மஹிந்த அமரவீரவுடன்  பேசியிருந்தேன். எதிர்வரும் அமைச் சரவை கூட்டத்தில் இந்த பிரச்சினை எடுத்துக்கொள்ளப்படும்.