(எம்.சி.நஜிமுதீன்)

2017 ஆம் ஆண்டின் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மே மாதம் 31 ஆம் திகதி வரையான முதல் ஐந்து மாத காலப்பகுதயில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி ஆயிரத்து இருநூற்று எழுபது பேர் பலியாகியுள்ளதாக போக்குவரத்து பொலிஸ் பிரிவி தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதயில் மோட்டார் சைக்கிள் விபத்துகள் 528 இடம்பெற்றுள்ளதுடன் அதில் சிக்கி 548 பேர் பலியாகியுள்ளனர். 

இதேவேளை கடந்த வருடத்தின் முதல் ஐந்து மாத காலப்பகுதயில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கையை விட இவ்வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 34 மரணங்கள் அதிகரித்துள்ளதாகவும் போக்குவரத்து பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.