லிந்துல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுக்கலை 7 ஆம் இலக்க கொலனியில் நேற்று முன்தினம்  பிறந்த சிசுவை யாருக்கும் தெரியாமல் புதைத்த இரு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த  சம்பவம் தொடர்பில் தகவலறிந்த லிந்துல பொலிஸார் சிசுவை புதைத்ததாக கூறப்படும் சிசுவின் தாயையும் பாட்டியையும் இன்று கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளையடுத்து சிசுவின் தாய் லிந்துல  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் நாளைய தினம்  நுவரெலியா மாவட்ட நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.