மூன்று மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய எம்பிலிப்பிட்டி உடுகம மகா வித்தியாலய ஆசிரியர் பாடசாலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

எம்பிலிப்பிட்டி உடுகம மகா வித்தியாலத்தில் தரம் 6 இல் கல்வி கற்கும் மூன்று மாணவிகளை அப் பாடசாலையில் கல்விகற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்முறைக்குட்படுத்தியுள்ளார்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரை எம்பிலிப்பிட்டி பொலிஸார் கைது செய்து எம்பிலிப்பிட்டிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து குறித்த ஆசிரியர் 4 நாட்கள் சிறையிலடைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலை ஆசிரியர் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பாக கல்வித் திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.