தனுஷ் என்றால் எப்போதும் ஆச்சரியம் தான். நடிகராக அறிமுகமாகி, ரசிக்கும் படியான நடிகராக ஏற்றுக்கொள்ளவைத்து, பொக்ஸ் ஓபிஸ் ஸ்டாராக முன்னேறி, இன்று முன்னணியில் இருக்கிறார் தனுஷ். இவர் நடிகர், பாடலாசிரியர், வசனகர்த்தா, பாடகர், இயக்குநர் என பலமுகங்களைக் கடந்து தற்போது இணையவாசிகளின் கவனத்தைக் கவர்ந்துகொண்டிருக்கும் இணையத் தொடர்களின் மீது தனுஷின் கவனம் செல்கிறது.

விரைவில் வெப் சீரிஸ் எனப்படும் இணையத் தொடர் ஒன்றை இயக்கவிருக்கிறார் தனுஷ். இதற்கான கதைவிவாதத்தில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஆனால் இந்த தொடரில் தனுஷ் நடிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இதற்கு அவரின் இனிய நண்பர் சீன் ரோல்டன் இசையமைக்கக்கூடும் என்று தெரியவருகிறது.

தகவல் : சென்னை அலுவலகம்