இலங்கைக்கு எதிரான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில்வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

இலங்கை - இந்­திய அணிகள் மோதும் 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கண்டி பல்­லே­க­லயில் இன்று ஆரம்பமாகிறது.

இந்த டெஸ்­டிலும் வென்று இந்­திய அணி இலங்­கைக்கு வெள்­ளை­ய­டிக்­குமா? அல்­லது இறு­திப்­போட்­டியில் வென்று ரசி­கர்­க­ளுக்கு இலங்கை ஆறுதல் அளிக்­கு­மா என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­ன்­றது. 

விராட் கோஹ்லி தலை­மை­யி­லான இந்­திய கிரிக்கெட் அணி இலங்­கையில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு விளை­யாடி வரு­கி­றது.

இலங்கை -– இந்­திய அணி­க­ளுக்­கி­டையில் நடை­பெற்றுவரும் 3 டெஸ்ட் போட்­டிகள் கொண்ட தொடரில் காலியில் நடை­பெற்ற முதல் டெஸ்டில் 304 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்­திலும், கொழும்பில் எஸ்.எஸ்.சி. மைதா­னத்தில் நடை­பெற்ற  2ஆ-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்­திலும் இந்­தியா வெற்றி பெற்று 2-0 என இந்திய அணி தொட­ரையும் கைப்­பற்­றிக்­கொண்­டது.