அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் எச்­ச­ரிக்கை.!

Published By: Robert

12 Aug, 2017 | 09:43 AM
image

வட கொரியா  அமெ­ரிக்­கா­வுக்கு எதி­ராக எதை­யா­வது மேற்­கொள்­ளு­மாயின் அந்­நாடு மிகவும் அஞ்சி நடுங்க நேரிடும்  என அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப்  எச்­ச­ரித்­துள்ளார். 

அமெ­ரிக்க பிராந்­தி­ய­மான குவா­முக்கு அருகில் 4  ஏவு­க­ணை­களை ஏவத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக   வட கொரியா அறி­வித்­துள்ள நிலை­யி­லேயே அவர் இந்த  எச்­ச­ரிக்­கையை விடுத்­துள்ளார். நியூ ஜெர்­ஸியில்  பெட்­மி­னிஸ்டர் பிராந்­தி­யத்­தி­லுள்ள குழிப்பந்­தாட்ட கழ­கத்தில் கடந்த வியா­ழக்­கி­ழமை உரை­யாற்­று­கையில் அவர் மேற்­படி விமர்­ச­னத்தை வெளி­யிட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

“நான் கூறு­வது என்­ன­வென்றால் வட கொரியா நாம் நேசிக்கும் அல்­லது நாம் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் அல்­லது  எமது  நட்பு நாடுகள் அல்­லது எம் மீது தாக்­குதல் நடத்­து­வது தொடர்பில்  சிந்­திப்­பது உள்­ள­டங்­க­லான ஏதா­வது நட­வ­டிக்­கையை மேற்­கொள்­ளு­மாயின்  அந்த நாடு மிகவும் மிகவும் அஞ்சி நடுங்க நேரிடும்"  என டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.

அதே­ச­மயம்  அமெ­ரிக்கா வட கொரியா­வு டன் பேச்­சு வார்த்­தை­களை நடத்­து­வது  குறித்து எப்­போதும் கருத்­திற்­கொண்­டுள்­ள­தாக  அவர் மேலும் தெரி­வித்தார். 

இந்­நி­லையில் அமெ­ரிக்க பாது­காப்புச் செய­லாளர் ஜேம்ஸ் மற்றிஸ் வட கொரி­யா­வு­ட­னான ஆயுத மோதல் பெரு நாசத்தை விளை­விப்­ப­துடன் இரா­ஜ­தந்­திர ரீதி­யாக பாரிய  விளை­வையும் ஏற்­ப­டுத்­து­வ­தாக இருக்கும் என எச்­ச­ரித்­துள்ளார்.

அதே­ச­மயம் அவுஸ்­தி­ரே­லிய பிர­தமர் மல்கொம்  டேர்ன்பல் தெரி­விக்­கையில்,   அமெ­ரிக்கா மீது வட கொரி­யாவால் தாக்­குதல் நடத்­தப்­ப­டு­மானால் தனது நாடு அந்­நாட்­டுக்கு  எதி­ரான போரொன்றில் இணைந்து கொள்ள தயார் நிலையில் உள்­ள­தாகக் கூறினார். அமெ­ரிக்கா மீதான தாக்­கு­த­லொன்று நடத்­தப்­படும் பட்­சத்தில் அமெ­ரிக்­கா­வுக்கும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இடையில் செய்து கொள்­ளப்­பட்ட அன்சஸ் உடன்­ப­டிக்­கையின் பிர­காரம்  அமெ­ரிக்­காவின் உத­வ அவுஸ்­தி­ரே­லியா முன்­வரும் என்று  கூறிய மல்கொம்  டேர்ன்பல், நாம் தாக்­கப்­படும் பட்­சத்தில் அமெ­ரிக்கா எமது உத­விக்கு வரும் என்று தெரி­வித்தார்.

வட கொரியா கடந்த ஜூலை மாதம் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக் கூடிய இரு  ஏவு­க­ணை­களை ஏவிப் பரி­சோ­தித்­த­தை­ய­டுத்து பிராந்­தி­யத்தில் பதற்­ற­நிலை அதி­க­ரித்­துள்­ளது. ஐக்­கிய நாடுகள் சபை மேற்­படி  ஏவு­கணை பரி­சோ­த­னைகள் குறித்து  வட கொரி­யா­வுக்கு  எதி­ராக மேலதி  பொரு­ளா­தார தடை­களை  அண்­மையில் விதித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52