1983 ஆம் ஆண்டு இனக்­க­ல­வ­ரத்தின் போது இறந்த தமி­ழர்கள் தொடர்பில் சட்டம் ஒழுங்கு மற்றும் தென்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சர் சாகல ரட்­நா­யக்க தவ­றான தக­வல்­களை பாரா­ளு­மன்­றத்­திற்கு வழங்­கி­யுள்­ள­தாக சபையில் தெரி­வித்த நுவ­ரெ­லியா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தில­கராஜ், தவ­றான தக­வல்கள் வழங்­கப்­ப­டு­வதை தடுப்­ப­தற்­காக ஆணைக்­குழு அமைத்து நடை­பெற்ற விட­யங்­களை விசா­ரணை செய்­யப்­ப­ட ­வேண்­டு­மெ­னவும் கோரிக்கை விடுத்தார். 

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்ளிக்­கி­ழமை வெற்­றி­ட­மா­கின்ற கிராம உத்­தி­யோ­கத்தர் பத­வி­களில் பதில் கடமைபுரியும் நிய­ம­னங்­க­ளுக்­காக வினை­த்தி­றன்­ மிக்க வேலைத்­திட்­ட­மொன்றை தயா­ரித்தல் தொடர்­பாக ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்­தறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் புத்­திக பத்­தி­ர­ணவின் தனி­நபர் பிரே­ரணை மீதான விவா­தத்தில் உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடந்தும் உரை­யாற்­று­கையில், 

கடந்த 28 ஆம் திகதி வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குண­வர்த்­தன சட்டம் ஒழுங்கு மற்றும் தென்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்­ச­ரி­டத்தில் 1983 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்­களில் இடம்­பெற்­றி­ருந்த இனக்­க­ல­வ­ரத்­தினால் இடம்­பெ­யர்ந்த, காணா­மல்­போன, காய­ம­டைந்த தமி­ழர்­களின் எண்­ணிக்­கையை மாவட்ட அடிப்­ப­டையில் தனித்­த­னி­யாக வழங்­கு­மாறு கேள்­வி­களை தொடுத்­தி­ருந்தார். 

இதற்குப் பதி­ல­ளித்த சட்டம் ஒழுங்கு மற்றும் தென்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சர் சாகல ரட்­நா­யக்க சமர்ப்­பித்த பதிலில் பதுளை, மாத்­தறை, கண்டி, கேகாலை மாவட்­டங்­களில் ஏழு தமி­ழர்­களே  இறந்­த­தாக கூறி­யி­ருந்தார். அத்­துடன் பொலிஸார் மாவட்ட ரீதியில் தர­வு­களை சேக­ரிப்­ப­தில்­லை­யெ­னவும் தெரிவித்தார்.

1983 ஆம் ஆண்டு நடை­பெற்ற இனக்­க­ல­வ­ரத்தில் ஏழு தமி­ழர்­களே உயி­ரி­ழந்­தனர் எனக் கூறு­வது பெரும் கேலிக்­கூத்­தாகும். ஆகவே பாரா­ளு­மன்­றத்தில் தவ­றான தக­வல்கள் வழங்­கப்­ப­டு­வதை தவிர்க்க­ வேண்டும். குறிப்­பாக இதற்கு கிராம சேவகர்­ களின் பங்கு மிகவும் அவ­சி­ய­மா­கின்­றது. ஆகவே அது­கு­றித்து கவனம் செலு த்த வேண்டியது மிகவும் முக்­கி­ய­மானதாகும். மலை­யக மக்கள் பிர­ஜா ­வு­ரிமை பறிக்­கப்­பட்டது முதல் பல்­வேறு பாதிப்­புக்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்ளனர். அந்­தப் ­பா­திப்­புக்­க­ளை­யா­வது வெளிப்படுத்துவதற்கு ஆணைக் குழு வொன்றை அமைக்குமாறு கோரியிருந் தேன்.

ஆணைக்குழுக்களை அமைப்பதன் ஊடக இத்தகைய தவறான தகவல்கள் வழங்கப்படுவது தடுக்கப்படும். ஆகவே ஆணைக்குழுவை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.