ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது.!

Published By: Robert

12 Aug, 2017 | 09:18 AM
image

ராஜீவ் கொலை வழக்கின் குற்­ற­வாளிகள்  றொபர்ட் பயஸ்  மற்றும்  ஜெயக்­குமார்  ஆகி­யோரை விடுவிக்க முடி­யாது  என்று மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.  முன்னாள் பிர­தமர் ராஜீவ்­காந்தி கொலை வழக் கில் முருகன், சாந்தன், பேர­றி­வாளன், றொபர்ட் பயஸ், ஜெயக்­குமார் உள்­ளிட்ட 7 பேர் சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வரு­கின்­றனர். 25 ஆண்­டு­க­ளுக்கும் மேலாக சிறையில் உள்­ள­வர்­களை விடு­தலை செய்ய வேண்டும் என தமி­ழக அர­சியல் கட்சித் தலை­வர்கள் தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

இந்­நி­லையில் ஜெயக்­குமார், றொபர்ட் பயஸ் ஆகியோர் கடந்த 2012 ஆம் ஆண்டு தங்­களை விடு­விக்­கக்­கோரி சென்னை உயர்­நீ­தி­மன்­றத்தில் வழக்கு தொடர்ந்­தனர். இந்த மனு, கடந்த ஜன­வரி மாதம் விசா­ர­ணைக்கு வந்­த­போது, தற்­போ­தைய நிலை­கு­றித்து மத்­திய, மாநில அர­சுகள் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று  உயர் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் இது­தொ­டர்­பான வழக்கு நேற்று மீண்டும் விசா­ர­ணைக்கு வந்­தது. அப்­போது ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஜெயக்­குமார், றொபர்ட் பயஸை விடு­விக்க முடி­யாது என மத்­திய உள்­துறை அமைச்­சகம் பதில் மனுத்­தாக்கல் செய்­தது. ஆயுள் தண்­டனை என்­பதே வாழ்நாள் முழு­வதும் சிறையில் கழிக்க வேண்டும் என்­ப­துதான். எனவே ஜெயக்­குமார் மற்றும் றொபர்ட் பயஸ் ஆகியோர் வாழ்நாள் முழு­வதும் சிறையில் இருக்க வேண்­டி­யது தான் என்றும் மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது. இத­னி­டையே பேர­றி­வாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கை எதிர்வரும் 14ஆம் திகதி உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52