நாட்டின் பல பாகங்களிலும் எதிர்வரும் நாட்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சியை எதிர்பார்கலாமென வானிலை அவதானநிலையம் எதிர்வு கூறியுள்ளது.

எதிர்வரும் 12 ஆம் திகதியில்இருந்து 15 ஆம் திகதி வரை நாட்டின் பல பாகங்களிலும் மழைபெய்யக் கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

 திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அநுராதபுரம், ஆகிய மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சியை எதிர்பார்ப்பதுடன் ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 75 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியுமென வானிலை அவதான நிலையம் மேலும் எதிர்வு கூறியுள்ளது.