(எம்.ஆர்.எம்.வஸீம்)

அரச மொழிக்கொள்கை சரியானமுறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டின் தேசிய பிரச்சினைக்கு 51வீதம் தீர்வு கிடைக்கும். மீதியை அதிகாரப்பகிர்வின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் அரசகரும மொழிகள் திணைக்களத்தின் அனுசரணையுடன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தமிழ், சிங்கள மொழி பயிற்சி வகுப்பின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.