மன்னார் எழுதூர் சந்தியில் வைத்து 30 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருளுடன் 3 சந்தேக நபர்களை டற பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவல்களுக்கமைய கடற்படையினரும் கொழும்பு விஷேட பொலிஸ் பிரிவினரும் இணைந்து இன்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது  மன்னார் எழுதூர் சந்தியில் வைத்து 30 கிலோ கிராம் கஞ்சாவுடன் குறித்த 3 சந்தேக நபர்களையும் செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட 30 கிலோ கிராம் கேரள கஞ்சாவை விற்பனைக்காக குறித்த 3 நபர்களும் கொண்டு செல்லும் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகையும் மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.