சிறுநீரக வியாபாரம்: 6 வைத்தியர்கள் தொடர்பு: விசாரணைக் குழு நியமனம்

Published By: MD.Lucias

22 Jan, 2016 | 08:31 PM
image

மக்களை ஏமாற்றி சட்டவிரோதமான முறையில் சிறுநீரக வியாபாரத்தில் ஆறு வைத்தியர்கள் தொடர்புபட்டுள்ளதாக இந்திய பொலிஸாரினால் கிடைக்கப்பட்ட தகவலின் பிரகாரம் உண்மையை கண்டறிவதற்கான விசாரணையை முன்னெடுக்கும் முகமாக சுகாதார அமைச்சினல் மூன்று பேரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சுகாதார அமைச்சின் தனியார் வைத்தியசாலைகள் தொடர்பான பணிப்பாளர் காந்தி ஆரியரத்ன, மேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் தீப்தி பெரேரா, சுகாதார அமைச்சின் விசாரணை பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவரும் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிறுநீரக மோசடிகள் தொடர்பில் ஒரு வாரத்தில் அறிக்கை சமர்பிக்குமாறு சுகாதார, சுதேச வைத்தியம் மற்றும் போசனை துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் விடுக்கப்பட்ட  பணிப்புரைக்கு அமைவாகவே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தனியார் வைத்தியசாலைகளுக்கு சென்று துரித விசாரணை மேற்கொண்டதன் பின்னர் முழுமையான அறிக்கை ஒரு கிழமைக்குள் அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

குறித்த அறிக்கையின் பிரகாரம் ஆறு வைத்தியர்கள் தொடர்பில் வைத்திய சபைக்கு அறிவுறுத்தவும் சுகாதார அமைச்சு திட்டமிடப்பட்டுள்ளது. 

சிறுநீரக நோயாளிகளை வைத்து சட்டவிரோதமான முறையில் சிறுநீரக வியாபாரத்தில் இலங்கை வைத்தியர்கள் ஈடுப்பட்டு வருவதாக இந்திய பொலிஸார் ஊடகங்கள் வாயிலாக தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து  ஆராய்ந்த பின்னர் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களுக்கான மாற்று சிகிச்சையை அரசாங்கம் நிறுத்துவதற்கு நேற்றைய தினம் தீர்மானித்திருந்தது. 

இந்நிலையிலேயே இது குறித்தான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கும் நோக்குடன் மூவரடங்கிய குழுவினை சுகாதார அமைச்சு நியமித்துள்ளது. இந்த குழுவின் அறிக்கை கிடைக்கபெற்றவுடன் அடுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13