பாடசாலைக்கு கையடக்கத்தொலைபேசியை எடுத்துச்சென்று அதிபரிடம் மாட்டிக்கொண்ட மாணவி பதற்றத்தில் திப்பட்டுவாவ பாலத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று அக்குரஸ்ஸயில் இடம்பெற்றுள்ளது.

க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தனது கையடக்கத்தொலைபேசியை பெற்றோருக்குத் தெரியாமல் பாடசாலைக்கு எடுத்துச் சென்று அதிபரிடம் மாட்டிக்கொண்டுள்ளார் அதனால் தொலைபேசியை மாணவியிடமிருந்து கைப்பற்றிக்கொண்ட அதிபர் பெற்றோருடன் வந்து கையடக்கத்தொலைபேசியை பெற்று செல்லுமாறு கட்டளை இட்டுள்ளனர்.

மேலும் குறித்த மாணவியின் பெற்றோர் பாடசாலைக்கு வந்து அதிபரை சந்திக்க வேண்டும் என மாணவியின்  வீட்டிற்கு பாடசாலை நிர்வாகம் செய்தி அனுப்பியதால் பதற்றமும் பீதியுமடைந்த மாணவி திப்பட்டுவாவ பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மாணவியின் பாடசாலை பை நீரில் மிதப்பதை கண்டு இறந்த நிலையில் இருந்த மாணவியை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட மாணவியின் பாடசாலைப்பையிலிருந்த தேசிய அடையாள அட்டையிலிருந்தே தற்கொலை செய்து கொண்ட மாணவி தருஷி சந்தருவனி என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.