பாகிஸ்­தா­னுக்கு வெற்­றிலை ஏற்­று­ம­தி­

Published By: Robert

11 Aug, 2017 | 10:29 AM
image

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் பயிர்ச்­செய்­கையில் களு­தா­வளைக் கிராமம்  தொன்று தொட்டு முன்­னணி வகித்­து­வ­ரு­கி­றது. அங்கு பிர­தான உற்­பத்திப் பொரு­ளாக வெற்­றிலை காணப்­ப­டு­கி­றது. இது பாகிஸ்­தா­னி­யர்­களால் பெரிதும் விரும்பிச் சுவைக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தாகும். பாகிஸ்தான் இதனை இறக்­கு­மதி செய்­வ­தற்கு விருப்பம் தெரி­வித்­துள்­ளது. இச்­சந்­தர்ப்­பத்தை தவ­ற­வி­டாது அதனை ஏற்­று­மதி செய்­வ­தற்­கான ஏற்­பா­டு­களை அரசு செய்­து­வ­ரு­கி­றது என ஐக்­கிய தேசிய கட்­சியின் மாவட்ட அமைப்­பாளர் எஸ். கணே­ச­மூர்த்தி தெரி­வித்தார்.

அவர் இது­பற்றி மேலும் தெரி­விக்­கையில்,

எந்­த­வொரு உற்­பத்­திக்கும் தேவை இருக்க வெண்டும். தேவை இல்­லா­த­போது அது செல்­லாக்­கா­சா­கி­விடும். களு­தா­வளை வெற்­றி­லைக்கு அந்த நிலை இற்­றை­வ­ரைக்கும் ஏற்­ப­ட­வில்லை. 

உற்­பத்­தி­யா­ளர்­களின் எண்­ணிக்கை கூடும்­போதும், பயிர்ச்­செய்­கையின் விஸ்­த­ரிப்புக் கூடும்­போதும் தேவைக்­க­தி­க­மான உற்­பத்தி ஏற்­பட்டு அதன்  மவு­சு­கு­றைய இட­முண்டு. 

இதனை தவிர்க்க வேண்­டிய அவ­சிய தேவை களு­தா­வளை மக்­களை நோக்கி அவர்கள் விரும்­பியோ, விரும்­பா­மலோ வந்­துள்­ளது. 

பயிர்­செய்­கையில் ஈடு­ப­ட­வேண்டாம் என்றோ, உற்­பத்­தியை மேம்­ப­டுத்த வேண்டாம் என்று கூறு­வதோ பொருத்­த­மற்­றது. அது­பல அநா­வ­சிய கேள்­வி­களை தோற்­று­வித்­து­விடும். அவர்­களின் ஜீவா­தா­ரமே பயிர்த்­தொ­ழில்தான். அதை நிறுத்த முனை­வது நியா­ய­மா­காது. ஆதலால் அதனை ஏற்­று­மதிப் பொருள் என்ற அந்­தஸ்­திற்கு உயர்த்­தி­விட்டால் பிரச்­சி­னை­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைத்­த­தா­கி­விடும். 

அத்­தோடு அச்­செ­யற்­பாடு நம் ­நாட்­டிற்கு அந்­நியச் செலா­வ­ணி­யையும் அழைத்­து­வரும். இதை­விட, இதை­வைத்தே, களு­தா­வளைக் கிரா­மத்தை ஏற்­று­ம­திக்­கி­ராமம் என்ற அந்­தஸ்­திற்கும் உயர்த்­தி­வி­டலாம். இவ் அந்­தஸ்து அக்­கி­ரா­மத்­திற்கு அர­சினால் வழங்­கப்­ப­டு­கின்ற பல நன்­மை­களை கொண்­டு­வந்து சேர்க்கும்.  அதற்­கான ஏற்­பா­டுகள் விரை­வாக நடை­பெற்று வரு­கின்­றன. இத­னைநான் வேகப்­ப­டுத்தி வரு­கிறேன்.

இத­னி­டையே களு­தா­வளை வெற்­றி­லையின் மவுசை குறைப்­ப­தற்­கான பல­ தந்­தி­ரோ­பா­யங்­களை சில விஷ­மிகள் திரை­ம­றைவில் செய்து வரு­வ­தாக எனக்கு தக­வல்கள் கிடைத்­துள்­ளன. அதில் பிர­தா­ன­மாக இர­சா­யனப் பச­ளை­யையும், கிரு­மி­நா­சி­னி­க­ளையும், களை நாசி­னி­க­ளையும் பாவித்து உற்­பத்­தியை அதி­க­ரிக்கச் செய்யும் வண்ணம் ஆலோ­சனை என்ற பெயரில் உபத்­தி­ர­வத்தை புகுத்து­வ­தாக அறி­யப்­ப­டு­கி­றது. இவ்­வாறு செய்­வதால் உற்­பத்தி கூடலாம். ஆனால், அதன் சுவையின் தரம் குறைந்­து­விடும். 

உற்­பத்­தி­யா­ளர்கள் உற்­பத்திப் பெருக்­கத்தில் கவனம் காட்­டு­வது போல்,அதன் தரத்தின் மீது அதீ­த­க­வனம் காட்ட வேண்டும். தரம் குறை­யும்­போது ஏற்­று­ம­திப் ­பொருள் என்ற அந்­தஸ்து இல்­லாமற் போய்­விடும். பிச்சை வேண்டாம் நாயைப் பிடித்தால் போதும் என்ற நிலையை வர­வேற்க வேண்­டி­வரும் என்­பதை உற்­பத்­தி­யா­ளர்கள் மனதில் ஏற்றம் செய்து கொள்ள வேண்டும். 

இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்துமாறு களுதாவளையின் உள்ளூர் தலைமைகளுக்கு விளக்கிக் கூற இருக்கிறேன். அதேபோன்று இப்பகுதியின் விவசாயப் போதனாசிரியர்களின் இடைவிடாத ஆலோசனைகளும், ஊக்குவிப்பும் உற்பத்தியாளர்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது. இவை கிட்டும் போது விசமத்தனமான அறிவுரைகள் உற்பத்தியாளர்களிடம் எடுபடாது என்று நம்புகிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34