கிளிநொச்சி, முரசுமோட்டை பகுதியில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின்   விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.  

குறித்த சம்பவம் தொடர்பாக கடந்த மாதம் சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே   எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறுஉத்தரவிட்டுள்ளார்.