மூளைப்பகுதியில் எதிர்பாராதவிதமாக அடிப்படுவதால் மூளையில் உள்ள நரம்புகளில் இரத்த கசிவு ஏற்படும். இதில் ஒரு சிலருக்கு நரம்புப் பகுதியில் இரத்தம் உறைந்து கட்டிகளாகிவிடும். இதன் காரணமாக மூளைப்பகுதியில் இரத்த அழுத்தம் ஏற்படும். உலகில் இவ்வகையான பாதிப்பு லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படும் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் 5 சதவீதத்தினர் திடீரென்று உடல்நலகுறைவு ஏற்பட்டு மரணத்தைக் கூட சந்தித்திருக்கிறார்கள். இந்த பாதிப்பு ஆண்களைக் காட்டிலும் பெண்களையே பாதிக்கிறது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப மாற்றங்களால் இதற்கான சிகிச்சை கண்டறியப்பட்டிருக்கிறது. இதன் மூலம் எண்பது சதவீதத்தினருக்கு மேல் சிகிச்சைப் பெற்று குணமடைந்திருக்கிறார்கள்.

பெருமூளை இரத்த அழுத்தம் (cerebral venous thrombosis) எனப்படும் இந்த பாதிப்பிற்கு நீண்டநாளாக நீடிக்கும் தலைவலி கூட அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். இவர்கள் உடனடியாக மருத்துவர்களை சந்தித்து எம் ஆர் ஐ, சி டி ஸ்கேன், அல்ட்ராசவுண்ட், இரத்த பரிசோதனை, venography  மற்றும் ஓஞ்சியோகிராபி போன்ற பரிசோதனைகளை செய்தும் இமேஜிங் பரிசோதனை செய்தும் உறுதிப்படுத்திக் கொண்டு சிகிச்சையை பெறலாம். சிகிச்சைகள் பெற்றால் அதிலும் தொடக்க நிலையில் கண்டறிந்து சிகிச்சைகள் பெற்றால் 100 சதம் குணமடையலாம்.

மூளையில் இரத்த அழுத்தம் ஏற்படாதிருக்கவேண்டும் என்றால், சத்துள்ள ப்ரெஷ்ஷான காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். தினமும் 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யவேண்டும். புகைப்பிடிப்பதை முற்றாக தவிர்க்கவேண்டும். சர்க்கரைநோயிருந்தால் அதனை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளவேண்டும்.

Dr. அகர்வால்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்