திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து திரைப்படத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய், தனக்கான கதையை மிகவும் கவனத்துடன் தெரிவு செய்து நடிக்க ஒப்புக்கொள்கிறார்.

முன்னணி இயக்குநர் கரன் ஜோஹர் இயக்கிய ‘யே தில் ஹை முஸ்கில்’ என்ற படத்தில் இளம் நடிகர் ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்தார் நடிகை ஐஸ்வர்யா ராய். இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் தற்போது ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ராவின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘பான்னி கான் ’ என்ற படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அக்சய் ஓபராய் என்ற வளரும் இளம் நடிகர் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இவர் ஐஸ்வர்யாவின் முன்னாள் காதலரான நடிகர் விவேக் ஓபராயின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விவேக் ஓபராய் தல அஜித் நடிக்கும் விவேகம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் : சென்னை அலுவலகம்