கரீபியன் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும், விக்கெட் காப்பாளருமான குமார் சங்கக்கார நேற்றைய போட்டியில் அதிக சினமுற்றமையை அவதானிக்க முடிந்தது.

நேற்றைய தினம் இடம்பெற்ற 7 ஆவது போட்டியில் டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியும் ஜமைக்கா டலவாஸ் அணி மோதிக்கொண்டன.

குறித்த போட்டியில் ஜமைக்கா டலவாஸ் அணித் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்கார அணித்தலைவராக செயற்பட்டார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 19.5 ஓவர்களில் 147 ஓட்டங்களை குவித்தது. 148 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய ஜமைக்கா டலவாஸ் அணி சங்காவின் சிறப்பான ஆட்டத்தினால் 19.2 ஓவர்களில் வெற்றியிலக்கினை கடந்து 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

எனினும், குறித்த போட்டியின் போது சங்கா பலமுறை கோபமடைந்ததை அவதானிக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது.