சவளக்கடை பிரதேசத்தில் முச்சக்கர வண்டியிலிருந்த தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 02 ஆவது சந்தேக நபரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஐ.பயாஸ் றஸாக் செவ்வாய்க்கிழமை உத்தர விட்டுள்ளார்.

சவளக்கடை பிரதான வீதியில் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி நிறுத்தப்பட் டிருந்த முச்சக்கர வண்டியில் இரு நபர்கள் 

08 ஆயிரம் ரூபாய் பணம், கையடக்கத் தொலைபேசி என்பவற்றை திருடிச் சென்றுள்ளதாக உரிமையாளரால் சவளக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம் முறைப்பாட்டையடுத்து பொலி ஸார் மேற்கொண்ட விசாரணையின் போது திருட்டுச் சம்பவத்துடன் தொடர் புடைய ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாவது சந்தேக நபரை கடந்த மாதம் 19ஆம் திகதி புதன்கிழமை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஐ. பயாஸ் றஸாக் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (08) ஆஜர் செய்த போது அவரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.