இலங்­கை­யு­ட­னான மூன்­றா­வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்­டியில் இந்­திய அணியில் சுழற்­பந்து வீச்­சாளர் ரவீந்­திர ஜடே­ஜா­வுக்கு தடை விதிக்­கப்­பட்­டதால் அவ­ருக்கு பதி­லாக அக்ஸர் படேல் சேர்க்­கப்­பட்­டுள்ளார்.

இலங்­கைக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு விளை­யா­டி­வரும் இந்­திய அணி 3 டெஸ்ட் போட்­டிகள், 5 ஒருநாள் போட்­டிகள் மற்றும் ஒரே ஒரு இரு­ப­துக்கு 20 போட்­டியில் விளை­யா­டு­கின்­றது. 

நடந்து முடிந்த இரு டெஸ்ட் போட்­டி­களில் இந்­திய அணி அபார வெற்றி  பெற்று தொடரை கைப்­பற்­றி­யது.

இதனைத் தொடர்ந்து மூன்­றா­வது டெஸ்ட் போட்டி எதிர்­வரும் சனிக்­கி­ழமை தொடங்­க­வுள்­ளது. 

இரண்­டா­வது டெஸ்ட் போட்­டியின் போது இந்­திய சுழற்­பந்து வீச்­சாளர் ரவீந்­திர ஜடேஜா விதி­மு­றை­களை மீறி­ய­தற்­காக ஒரு டெஸ்ட் போட்­டியில் விளை­யாட தடை விதித்துஐ.சி.சி. நட­வ­டிக்கை மேற்­கொண்­டது.

இதனால், மூன்­றா­வது டெஸ்ட் போட் ­டியில் அவரால் விளை ­யாட முடி­யாது. இந்­நி­லையில், ஜடே­ஜா­வுக்கு பதி­லாக சுழற்­பந்து வீச்­சாளர் அக்ஸர் படேல் அணியில் சேர்க்கப்பட் டுள்ளதாக பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.