நாமலை ஜனாதிபதியாக்கும் முனைப்பில் மஹிந்த

Published By: Robert

10 Aug, 2017 | 10:06 AM
image

சுதந்­திர கட்­சியை சுய­வி­ருப்­பத்­துடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவிடத்தில் கைய­ளித்து விட்டு கட்­சி­யி­லி­ருந்து விலகிச் செல்ல முற்­படும்  முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்   ஷ  கட்­சியின் வளர்ச்­சிக்கு முர­ணாக செயற்­ப­டு­கின்றார். மஹிந்­த­வுக்கு தனது மக­னான நாமல் ராஜ­பக்­ ஷவை  ஜனா­ தி­பதி பத­வியில்   அமர்த்­து­வ­தற்­கான தேவை இருக்­கின்­றது போலவே தெரி­வ­தாக அமைச்சர் எஸ்.பி.திஸா­நா­யக்க தெரி­வித்­துள்ளார்.

ஹங்­கு­ராங்­கெத்த பகு­தியில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற நிகழ்­வொன்றின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு சுதந்­திர கட்சி தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டத்தில் கட்­சியை கைய­ளித்­து­விட்டு ஒருபுற­மாகச் சென்று கட்­சியின் ஒரு பிரி­வினர் மாத்­திரம் தமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­து­வது நியா­ய­மா­ன­தல்ல. 

அந்த தவறை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ­ஷவே முன்­னெ­டுக்­கின்றார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனி­யொரு சுதந்­திர கட்சி ஆட்­சி­யினை அமைப்­ப­தற்கு தனக்கு வலுச்சேருங்கள் என்­றுதான் கோரு­கின்றார். அவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் கட்­சி­யையும் முன்னாள் ஜனா­தி­பதி தானாக முன்­வந்து கைய­ளித்­து­விட்டு பின்னர்  விலகிச் சென்று புறம்­பே­சு­வதில் அர்த்­த­மில்லை. காரணம் கட்­சியை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டத் தில் கைய­ளிக்கும்போது மிக மகிழ்­ச்சி­யுடன் கைய­ளிக்­கின்றேன் என்றே கூறினார். அதே­நேரம் அர­சாங்­கத்­துடன் இணைந்து கொள்­கின்றபோதும் சக­லரும் ஆத­ர­வ­ளித்­தனர். சிறிதும் எதிர்ப்பு வர­வில்லை. அதனால் இரு கட்­சி­களும் தொடர்ந்தும் ஒரு­மித்து ஆட்­சி­செய்ய வேண்டும் என்­ப­தில்லை. இருக்­கவும் போவ­தில்லை. தேர்தல் என்று வரு­கின்ற போதும் தனித்தே போட்­டி­யி­டுவோம். அதனால் கட்­சி­யினை மேம்­ப­டுத்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேற்­கொள்ளும் முயற்­சி­க­ளுக்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ முட்­டுக்­கட்­டை­யி­டு­கின்றார் என்­றுதான் கூற வேண்டும். 

எவ்­வா­றா­யினும் அவ­ருக்கு சிறிது காலத்­திற்கு ஜனா­தி­பதி பத­வியில் மாற்றத்தை ஏற்­ப­டுத்த தேவை­யுள்­ளது. அது அவரின் மகன் நாமல் ராஜ­பக்­ ஷவிற்கு ஜனா­தி­பதி பத­வியை வழங்­கு­வ­தற்­கான முனைப்­பா­கவும் இருக்­கலாம்.  அது தவறான ஒரு நோக்கம் என்பதை அவர் விளங்கிக்கொள்ள வேண்டும்.அதனால் கட்சி  பிளவுபட்டுள்ளதில் தவறு ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேனவின் பக்கத்தில் இல்லை. மாறாக  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பக்கத்திலேயே உள்ளது  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47