அதிகரிக்கும் தற்கொலை : ஆண்­டு­தோறும் 8 இலட்சம் பேர்

Published By: Robert

10 Aug, 2017 | 09:13 AM
image

Image result for தற்­கொலை virakesari

உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் அறிக்­கையின் அடிப்­ப­டையில் உல­க­ளா­விய ரீதியில் 8 லட்சம் பேர் ஆண்­டு­தோறும் தற்­கொலை செய்­து­கொள்­கின்­றார்கள். அந்த வகையில் ஒவ்­வொரு 40 விநாடிகளுக்கு ஒருவர் தற்­கொலை செய்­து­கொள்­கிறார். என சுகா­தார கல்வி பணி­ய­கத்தின் பணிப்­பாளர் நாயகம் ஜெ.எம்.டபிள்யு. ஜய­சுந்­தர பண்­டார தெரி­வித்தார்.

எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் 10 ஆம் திகதி சர்­வ­தேச தற்­கொலை தடுப்பு  தினம் அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்­ளது.இதனை முன்­னிட்டு மக்­க­ளுக்கு விழிப்­பூட்டும் நோக்கில் சுகா­தார கல்வி பணி­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­யலாளர் கருத்­த­ரங்கில் உரை­யாற்றும் போதே அவர் இதனை தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், தற்­கொ­லைக்­கான கார­ணங்­களின் பட்­டி­யலின் அடிப்­ப­டையில் 90 சத­வீதம் தற்­கொ­லைக்கு மன அழுத்தம் கார­ண­மாக அமை­கின்­றது. இது குறித்து மக்கள் மத்­தியில் போதிய அறி­வின்­மையே காணப்­ப­டு­கின்­றது.

இலங்­கையை பொறுத்­த­மட்டில் 1995 ஆம் ஆண்டே அதி­கூ­டிய தற்­கொலை பதி­வா­கி­யுள்­ளது. தற்­போதும் தற்­கொ­லைகள் இடம்­பெற்ற வண்­ணமே இருக்­கின்­றன. குறிப்­பாக  முறை­யற்ற போதை­ப்பொருள் பாவனை, அதி­க­ரித்த வேலைப்­பளு, நெருங்­கிய உற­வுகளின் திடீர் பிரிவு அல்­லது எதிர்­பா­ராத மரணம், பரீட்சை மற்றும் கல்வி சுமை அதி­க­ரித்தல், பாலியல் உணர்­வு­களை கட்­டுப்­ப­டுத்த முடி­யாமை மற்றும் தவ­றான பாலியல் நடத்­தைகள், தொடர்ச்­சி­யான ஏமாற்­றங்கள் போன்ற கார­ணிகள் மன அழுத்­தத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றன.

இவ்­வா­றான மன அழுத்தம் ஆரம்ப கட்­டத்தில் இருக்கும் போது எதிர்­காலம் பற்­றிய அக்­கறை இன்மை, தூக்கம் இன்மை, நண்­பர்கள் மீதும் உற­வுகள் மீதும் நம்­பிக்­கை­யற்­றி­ருத்தல், தனி­மையை நாடுதல் போன்ற அறி­கு­றிகள் காணப்­படும் இதற்கு  ஆரம்ப கட்­டத்­தி­லேயே முறை­யான சிகிச்­சை­ய­ளிக்­கா­விடின் இது தற்­கொலை எண்­ணங்­களை தோற்­று­விக்கும்.

மேலும் தற்­கொ­லையை தூண்டும் கார­ணி­க­ளாக மருந்­த­கங்­களில் இல­குவில் அன்­டி­ப­யோட்டிக் மருந்­து­களை பெற்­றுக்­கொள்ளக்கூ­டி­ய­தாக இருக்­கின்­றமை மற்றும் கஞ்சா, குடு போன்ற போதைப்பொருட்­களின் தொடர்ச்­சி­யான பாவனை ஆகி­யன மேற்கோள் காட்­டப்­ப­டு­கின்­றன.

மன அழுத்தத்தின் தீவிர தன்மை யே தற்கொலை எண்ணங்களை தோற்றுவிக் கின்றது. மன அழுத்தத்தை ஆரம்ப கட்டத்

திலேயே கண்டறிந்து சிறந்த உளவளத் துணையின் ஆலோசனையை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22