ரஷ்யாவில் திருமணத்திற்காக பயணித்து வந்த மணப்பெண்ணின் கார் விபத்தில் சிக்கி சம்பவயிடத்திலேயே அவர் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாஷ்கொர்டொஸ்தான் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சம்பவயிடத்திலேயே 23 வயதான குஷல் ஜாக்கிரோவா என்ற மணப்பெண் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

திருமணத்திற்கு முன் தனது தோழியுடன் அழகு நிலையத்திற்கு சென்ற குஷல் ஜாக்கிரோவா, பின்னர் காரில் திருமண விழாவிற்கு திரும்பிக்கொண்டிருந்த போது பாஷ்கொர்டொஸ்தான் பகுதியில் வைத்து விபத்தில் சிக்கியுள்ளார்.

மற்றொரு காரில் வேகமாக வந்த நபர் ஒருவர், காரை முந்த முயன்ற போது குஷல் ஜாக்கிரோவா சென்ற காருடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய குஷல் ஜாக்கிரோவா சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த அவரின் தோழி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேசமயம், மற்றைய காரில் பயணித்த இருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.திருமணத்திற்கு தயாராக இருந்த 26 வயதான மணமகன் ஷாவிக்கோக்கு குறித்த செய்தி பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. 

குறித்த விபத்து பற்றிய தகவலறிந்த திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.இதனால், திருமணத்தால் விழா கோலம் கொண்டிருந்த வீடு ஒரே நிமிடத்தில் சோகமாய் மாறியுள்ளது.