பங்களாதேஷ், இந்தியா, வியட்நாம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் Apparel Tech Up வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து, இலங்கையில் தனது முதலாவது Apparel Tech Up ஐ ஜுலை 20 ஈம் திகதி ThreadSol முன்னெடுத்திருந்தது. 

கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இலங்கையின் ஆடைத்தொழிற்துறையைச் சேர்ந்தவர்களுடன் சர்வதேச ஆடைத்தொழில் விற்பனை மற்றும் உற்பத்தி துறைகளில் காணப்படும் போக்குகள் பற்றி கலந்துரையாடுவது நோக்காக அமைந்துள்ளது. 

இலங்கையின் ஆடைத்தொழிற்துறையைச் சேர்ந்தவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களான Artificial Intelligence, Big Data மற்றும் Mobility போன்றன எவ்வாறு பயன்தரக்கூடியதாக அமைந்திருக்கும் என்பது பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.

நாட்டின் 42 உற்பத்தி குழுமங்களின் 90 க்கும் அதிகமான உயர் முகாமைத்துவ பிரதிநிதிகளின் பிரசன்னத்துடன், இந்த நிகழ்வு நடைபெற்றதுடன், இவ்வாறு பங்கேற்றவர்களில், Sirio லிமிடெட் பிரதம நிறைவேற்று அதிகாரி பீலிக்ஸ் பெர்னான்டோ, Hirdaramani குழுமத்தின் பணிப்பாளர் ராகில் ஹைட்ராமணி, MAS Bodyline பிரதம நிறைவேற்று அதிகாரி முராட் மற்றும் ஜெஹான் முதாலிவ் மற்றும் Brandix ன் சாதிக் ஒமார், சிராஸ் ஒமார் மற்றும் ஹாசிப் ஒமார் ஆகியோரும் கலந்து கொண்டனர். விருந்தினர்களில், தொழில்நுட்ப சேவை வழங்குநர்களான Fast React Systems மற்றும் GSD ஆகியனவும் அடங்கியிருந்தன.

ThreadSold ன் வளர்ந்து வரும் சந்தைகளின் தலைமை அதிகாரியான அனாஸ் சகீலின் உரையுடன் இந்நிகழ்வு ஆரம்பமாகியிருந்தது. நவநாகரீக தயாரிப்புகள் பற்றி நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்கள் மத்தியில் காணப்படும் மாறிவரும் கட்டமைப்பு தொடர்பில் அவர் உரையாடியிருந்ததுடன், உற்பத்தியாளர்கள் மத்தியில் e - வணிகத்தின் வளர்ச்சி ஆற்றும் பங்களிப்பு பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “உலகளாவிய ரீதியில் மக்களின் விருப்பங்கள் மாற்றமடைந்து வருகின்றன. Amazon (அமெரிக்காவை தளமாகக்கொண்டியங்கும் e-வணிக நிறுவனம்) அமெரிக்காவின் நவநாகரீக ஆடைகள் விற்பனை துறைசந்தையில் 6.6 சதவீதத்தை தன்வசம் கொண்டுள்ளது. அடுத்த 5 ஆண்டு காலப்பகுதியில் 16.2 சதவீத வளர்ச்சியை பதிவு செய்ய எதிர்பார்த்துள்ளது. இந்த வளர்ச்சி, சர்வதேச ரீதியில் ஆடைகள் உற்பத்தி செயற்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். எமது ஆய்வுகளின் பிரகாரம், 15 நாடுகளின் 154 தொழிற்சாலைகளில், ஒரு பருவ காலத்துக்கான நவநாகரீகங்களின் எண்ணிக்கை CAGR 17.9 வீதமாக அதிகரித்த வண்ணமுள்ளதை காண முடிகிறது. 2020 இல் இன்றைய நிலையில் உற்பத்தி செய்யும் நவநாகரீகங்களை போன்று இரு மடங்கை உற்பத்தியாளர்கள் திட்டமிட வேண்டியுள்ளதுடன், மொத்த தொகையில் மாற்றம் இருக்காது” என்றார்.

இதனைத் தொடர்ந்து ThreadSol ஸ்தாபக பிரதம நிறைவேற்று அதிகாரி மனசிஜ் கங்குலியின் உரை நடைபெற்றது. 15 வருட கால அனுபவத்தை மனசிஜ் தன்வசம் கொண்டுள்ளதுடன், ThreadSol தயாரிப்புகள் பற்றிய விளக்கங்களை வழங்கியிருந்தார்.

AI, Big Data மற்றும் Mobility ஆகியன உலகின் ஆடை உற்பத்தி கட்டமைப்பை எவ்வாறு மாற்றும் என்பது பற்றிய விளக்கங்களையும் வழங்கியிருந்தார்.

மனசிஜ் கங்குலி கருத்துத் தெரிவிக்கையில், “Big Data, Artificial Intelligence  போன்றன ஆடைத்தொழிற்துறைகள் போட்டிகரமான விலையில் நிலைத்திருப்பதற்கு கட்டாயம் பின்பற்ற வேண்டிய முறைகளாக அமைந்துள்ளன. தேவையான தகவல்கள் காணப்படுவதுடன், அவற்றை பிரயோகிப்பதற்கு சரியான கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன என்பதுடன், தரவுகளை அடிப்படையாகக் கொண்ட தீர்மானமெடுத்தல்களும் அவசியமாகின்றன. ThreadSol சேர்ந்த நாம் தொடர்ச்சியாக புத்தாக்கத்தை பின்பற்றுவதுடன், அதனூடாக எமது வாடிக்கையாளர்களை தரமுயர்த்த பங்களிப்பு வழங்குகிறோம்” என்றார்.

ThreadSol பற்றி:

சிங்கப்பூரை தளமாகக் கொண்டுள்ள ThreadSol நிறுவனம், துணிகளில் கழிவு ஏற்படுவதை குறைக்கும் தீர்வுகளை அறிமுகம் செய்வதுடன், ஆடை உற்பத்தியாளர்களின் இலாபத்தை மேம்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்த வண்ணமுள்ளது.

2012ம் ஆண்டு முதல் ThreadSol இனால் வழங்கப்படும் தீர்வுகளில்intelloCut மற்றும் intelloBuy ஆகியன அடங்கியுள்ளதுடன், இந்தியா, இலங்கை, வியட்நாம், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஜோர்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் 120 க்கும் அதிகமான நாடுகளில் காணப்படும் ஆடைத்தொழிற்சாலைகளின் உற்பத்திச் செலவை 10 சதவீதம் வரை குறைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. இலங்கையில், ThreadSol தனது செயற்பாடுகளை உள்நாட்டு உற்பத்தியாளர்களான Hirdaramani குழுமம், MAS ஹோல்டிங்ஸ், Brandix, Maliban, Hela Clothing, Omegaline போன்றவற்றுடன் முன்னெடுக்கிறது. www.threadsol.com எனும் இணையத்தளத்துக்கு விஜயம் செய்து மேலதிக விவரங்களை பார்வையிடவும்.