பெண்கள் கழிவறையில் இரகசிய கமெரா ; வைத்தியர் மீது பொலிஸார் நடவடிக்கை

Published By: Priyatharshan

09 Aug, 2017 | 03:20 PM
image

அனுராதபுர அரச வைத்தியசாலையில் கணக்காய்வாளர் பிரிவில் அமைந்துள்ள பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட கழிவறையில் இரகசிய கமெராவொன்றை பொருத்திய  வைத்தியரொருவருக்கு எதிராக பொலிஸார் அனுராதபுரம் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப்பத்திரிக்கையை ஆராய்ந்த நீதிபதி, சம்பந்தப்பட்ட வைத்தியரை எதிர்வரும் 15 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர் கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடையவராவார்.

 அனுராதபுரம்  அரச வைத்தியசாலையில் கணக்காய்வாளர் பிரிவில் பணியாற்றும் பெண்கள் சிலர் சமர்ப்பித்த புகாரையடுத்தே பொலிஸார்  சம்பவம் தொடர்பான விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட வைத்தியரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த பொலிஸார் அவர் மீது விசாரணைகளை மேற்கொண்டபோது,  அவர் மீதான குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.

கைவிரல் அடையாளம் தொடர்பான விசாரணைகள் மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலை ஊழியர்கள் வழங்கிய வாக்குமூலங்களைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட வைத்தியருக்கு எதிராக பொலிஸார் குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

சந்தேக நபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய போதிய ஆதாரங்கள் இருப்பதாக சட்ட மா அதிபர் வழங்கிய ஆலோசனையை அடுத்து  குறித்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59