பிரான்ஸின் பாரிஸில் படையினர் மீது காரால் மோதி பயங்கவரவாதத் தாக்குதல் மேற்கொண்டதில் 6 படையினர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, படையினரை மோதி தாக்குதல் மேற்கொண்ட பி.எம். டபிள்யூ. வகை காரையும் தீவிரவாதத் தாக்குதலை முன்னெடுத்த கார் சாரதியையும் பாரிஸ் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பாரிஸ் தி வேர்டன் லெவல்லொயிஸ் எனும் இடத்திலுள்ள படையினர் முகாமிற்குள் இருந்து அணிவகுப்பிற்காக படையினர் வெளிவந்த போதே பி.எம். டபிள்யூ. காரில் வந்த தீவிரவாதி படையினரை மோதி விட்டு சம்பவ இடத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளார்.

குறித்த சம்பவத்தில் இரு படையினர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய நான்கு படையினரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் குறித்த தாக்குதல் சம்பவமானது நன்கு திட்டமிடப்பட்ட செயல் என்று எவ்வித சந்தேகங்களுமின்றி நிரூபணமாகிறது என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.