விவசாயிகள் ஒன்றிணைந்து பாராளுமன்ற சுற்றுவட்டாரத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளமையினால் அதனை அண்டியப்பகுதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

விவசாயிகள் ஒன்றிணைந்து பல்வேறு வகையான கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன் காரணமாக குறித்த வீதியை பயன்படுத்தம் வாகன சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு போக்குவரத்துப் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.