உறைய வைக்கும்  குளிர் கால­நிலை நிலவும்  பின்­தங்­கிய  ஆள­ர­வ­மற்ற  பிராந்­தி­ய­மொன்றில்  வெளி­யேற முடி­யாது சிக்கிக் கொண்ட நபர் ஒருவர் 3  நாட்­க­ளாக  பூச்­சி­க­ளையும்  பூக்­க­ளையும் உண்டு உயிர் வாழ்ந்த  சம்­பவம் மேற்கு அவுஸ்­தி­ரே­லி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

அந்­தோனி கொலிஸ் (32  வயது) என்ற மேற்படி நபர்  தனது வாழ்க்கைத் துணை­யான டெபி புளோம்­பீல்ட்­டுடன்   (39  வயது) டார்வின் பிராந்­தி­யத்­தி­லுள்ள கன்னிங் ஸ்டொக் ரூட்  பிராந்­தி­யத்­துக்கு சுற்றுப் பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்தார்.

இந்­நி­லையில் அவர் கடந்த வாரம் வியா­ழக்­கி­ழமை   மாலை டெபி­யி­ட­மி­ருந்து  பிரிந்து  ஆள­ர­வ­மற்ற பிராந்­தி­யத்தில் பாதை மாறிச் சென்­றி­ருந்தார்.

அங்­கி­ருந்து வெளி­யே­று­வ­தற்கு அவர் மேற்­கொண்ட முயற்சி தோல்­வியில் முடிந்து அவர் அந்தப் பிராந்­தி­யத்­துக்குள் வெளி­யேற முடி­யாது சிக்கிக் கொண்டார்.

இத­னை­ய­டுத்து  இரவு நேரப் பொழுதில் அங்கு நில­விய  உறைய வைக்கும் குளி­ரி­லி­ருந்து தன்னை தற்­காத்துக்  கொள்ள அவர் ஆழ­மான குழியைத் தோண்டி அதற்குள்  அங்­கி­ருந்த குப்­பை­களால் தனது உடலை மூடி­ய­வாறு படுத்து உறங்கி வந்­துள்ளார். இத்­துடன் அவர் பசியைப் போக்க அங்­கி­ருந்த மலர்­க­ளையும் பூச்­சி­க­ளையும் உண்டு ள்ளார்.

டெபி  தனது வாழ்க்கைத் துணையைக் காண­வில்லை என  பிராந்­திய அதி­கா­ரி­க­ளிடம்  செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்து,  மீட்புக் குழு­வினர் அந்தப் பிராந்­தி­யத்தில் அந்­தோ­னியை தேடிக் கண்­டு­பி­டிக்கும் நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­தனர்.

இத­னை­ய­டுத்து அந்­தோனி கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை  மீட்புக் குழு­வி­னரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு மீட்­கப்­பட்டார்.  உடல் உலர்­வுக்­குள்­ளா­கிய நிலையில் காணப்­பட்ட அவர் சிகிச்­சைக்­காக  உலங்­கு­வா­னூர்தி மூலம் நியூமான் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்டார். தற்­போது அவர் உடல் நலம் தேறி  வீடு திரும்­பி­யுள்­ள­தாக  பிராந்­திய அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.