ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று அமைச்சரவை கூடவுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் இன்று கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் போது, 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் மிக முக்கியமாக, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் இன்று கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.