கூட்டு எதிர்க்கட்சியினால் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பதா இல்லையா என்பது குறித்து நாளை மறுநாள் வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய குறித்த பிரேரணை தொடர்பில் சட்டமாஅதிபாரின் ஆலோசனை பெறப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று சபாநாயகர் அறிவிப்பு, மனுக்களை சமர்ப்பித்தல், வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் நிறைவடைந்தவுடன்  கூட்டு எதிர்க்கட்சியின் ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ ஒழுங்குப்பிரச்சினையை எழுப்பினார்.

அவர், கூட்டு எதிர்கட்சியைச் சேர்ந்த 30 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பித்துள்ளனர்.  அதை விரைந்து விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது.  அதுதொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை சபையில் தெரிவியுங்கள் என்றார்.