இன்றைய திகதியில் உலகிலேயே அதிகளவில் நிமோனியா காய்ச்சலுக்காக குழந்தைகள் இறப்பதாக இந்தியாவின் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. நிமோனியா காய்ச்சல் பெரும்பாலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைதான் அதிகம் பாதிக்கிறது. மிக அதிகமான குழந்தைகள் இறப்பதற்கும், நோய்த் தாக்கத்தால் மோசமான பின்விளைவுகளுக்கும் மிக முக்கியமான காரணமாக இருப்பது நிமோனியா காய்ச்சல் ஆகும்.

காய்ச்சல், இருமல், அதிகமாக மூச்சு வாங்குதல், மூச்சுவிட கஷ்டமாக இருத்தல் போன்ற அறிகுறிகளுடன் குழந்தைகள் இருந்தால் உடனே நிமோனியா காய்ச்சலுக்கான அறிகுறியா? என்பதை பரிசோதித்து உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். 

எடை குறைவு,  போதிய ஊட்டச்சத்தின்மை, விற்றமின் ஏ குறைபாடு, போதிய காலஅளவிற்கு தாய் பால் கொடுக்காதது, சிகரரெட் புகை போன்ற காரணங்களால் தான் குழந்தைகள் நிமோனியா காய்ச்சலுக்கு பாதிக்கப்படுவதற்கான காரணங்கள். இதை தவிர்த்து அதிக இடநெருக்கடியுள்ள பகுதிகளில் வசிப்பது, வீட்டில் இருப்பவர்களுக்கு நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது, மாசடைந்த காற்று போன்றவைகளும் நிமோனியா காய்ச்சல் தாக்கக்கூடும். அதனால் தான் ஒரு சிலர் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் குழந்தைகளை அருகில் சென்று கொஞ்சக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவர். 

இதற்கு தற்போது கூட்டு மருத்துவ சிகிச்சையும், பிரத்யேக மருத்துவ சிகிச்சையும் இருக்கிறது. அத்துடன் இந்நோயை வரவிடாமல் தடுக்கவேண்டும் என்றால், குழந்தைக்கு தவறாமல் தாய்ப்பால் கொடுக்கவேண்டும். குறைந்த பட்சம் குழந்தை பிறந்தது முதல் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்கவேண்டும். 

Dr. பத்மா

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்