பாடகி சுசித்ரா என்னுடைய இனிய தோழி. சுசிலீக்ஸ் விவகாரத்தில் அவருக்கு எச்தவித பொறுப்பும் இல்லை. வேறு யாரோ சிலர் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் இதனை வெளியிட்டிருக்கிறார்கள். அத்துடன் அந்த சமயத்தில் தனுஷ_ம், நானும் தோன்றும் வீடியோ விரைவில் வெளியாகும் என்றனர். நாங்கள் இருவரும் இதற்காக காத்திருந்தோம். ஆனால் தனுஷ் தன்னுடைய தொழிலில் அதீதி பக்தி கொண்ட ஒரு நேர்மையான மனிதர்.  என்கிறார் நடிகை அமலா பால்.

சுசீலீக்ஸ் விவகாரம் குறித்து தெலுங்கு மீடியா ஒன்று கேள்விக் கேட்க அதிலிருந்து பாதியிலேயே வெளியேறினார் தனுஷ். பின்னர் தாம் அப்படி நடந்துகொண்டிருக்கக்கூடாது என்று வருத்தப்பட்டார். ஆனால் தற்போது சுசிலீக்ஸ் விவகாரத்தை அமலா பால் பதிலளித்திருப்பது ஏன் என்று தெரியவில்லை என்கிறார்கள் தனுஷின் நண்பர்கள்.

தகவல் : சென்னை அலுவலகம்