இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமான முறையில் தங்கம் கடத்திச் சென்ற இருவரை இந்திய சுங்கத்திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 8 கிலோ 325  கிராம் தங்கத்தினை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இலங்கையிலிருந்து படகுமூலம் இந்தியாவிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் இந்திய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.