அங்கவீனமடைந்த முன்னாள் இராணுவ வீரர்களைக்கொண்ட “இராணுவ வீரர்களின் உரிமையை வென்றெடுக்கும் தேசிய படையணி” யானது இதுவரை தமது கோரிக்கைகளுக்கு  தீர்வுகிடைக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்திலிருந்து ஆர்ப்பாட்டப் பேரணியாக ஜனாதிபதி செயலகம் வரை சென்று தமது எதிர்ப்பை வெளியிடவுள்ளதாக அவ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் இன்று காலை முதல் காலிமுகத்திடலுக்கு பிரவேசிக்கும் லோட்டஸ் சுற்றுவட்டத்தில் இருந்து, ஜனாதிபதி செயலகம் வரை, கலகம் அடக்கும் காவல்துறை பிரிவினர், நிறுத்தப்பட்டுள்ளதுடன் அவ்வீதியடான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.