இவ்­வ­ருடம் ஒக்­டோபர் மாதம் நடை­பெ­ற­வி­ருந்த சப்­ர­க­முவ, கிழக்கு, வட­மத்­திய மாகாண சபை தேர்­தல்­களை பிற்­போ­டு­வ­தற்­கான 20 ஆம் திருத்­தச்­சட்­டத்­துக்கான வர்த்தமானி அறி­வித்தல் வெளியி­டப்­பட்­டுள்­ளது. அந்­த­வ­கையில் இந்த சட்­ட­மூலம் விரைவில் பாரா­ளு­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­படும். அந்­த­வ­கையில்  மாகாண சபைத் தேர்­தல்கள்  2019 ஆம் ஆண்டே நடை­பெறும் என  எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அர­சி­ய­ல­மைப்பின் 154 ஈ உறுப்­பு­ரை­யினை மாற்றி 20 ஆம் திருத்தத்­திற்­கான மாகாண சபை தேர்தல் திருத்த சட்­ட­மூலம் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. அனைத்து மாகாண சபை­க­ளுக்­கு­மான தேர்­தலை ஒரே தினத்தில் நடத்­து­வ­தற்கும் மாகாண சபை­களை கலைப்­ப­தற்­கான திகதி வரை­ய­றை­களை நிர்­ண­யிப்­பது தொடர்­பிலும் 20 ஆம் சட்ட திருத்தத்தில் இணைக்­கப்­பட்­டுள்­ளது. 

உள்­ளூ­ராட்சி சபை தேர்­தல்கள் கால தாம­தப்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற நிலையில் தற்போது மாகாண சபை தேர்தல்களும் பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.