குடா­நா­டெங்கும் முன்­னெ­டுக்­கப்­பட்ட சுற்றி வளைப்பு நட­வ­டிக்­கை­களில் மொத்­த­மாக 33 பேர் கைது செய்­யப்­பட்­ட­தாக வட பிராந்­திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலு­வ­லகம் தெரி­வித்துள்ளது. 

கடந்த சனிக்­கி­ழமை முதல் முன்­னெ­டுக்­கப்­பட்ட இந்த சிறப்பு சுற்றி வளைப்­புக்­களில் காங்­கே­சன்­துறை மற்றும் யாழ்.பொலிஸ் பிராந்­தி­யங்­களில் இந்த கைது கள் பதி­வா­ன­தாக வட பிராந்­திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலு­வ­லக தக­வல்­களை மேற்கோள் காட்டி பொலிஸ்  ஊடகப் பேச்­சா­ளரின் அலு­வ­லகம் அறி­வித்­தது.

குடா­நாட்டின் குட­வத்தை , துன்­னாலை, வேம்­படி, அல்வாய் மற்றும் யாழ். பகு­தி­களைச் சேர்ந்­த­வர்­களே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் கடந்த ஜூலை 9 ஆம் 10 ஆம் திக­தி­களில் பருத்­தித்­துறை மணல்­காடு பகு­தியில் மணல் லொறி மீது நடத்­தப்­பட்ட துப்­பாக்கிச் சூட்டில்    இளைஞர் ஒருவர் கொல்­லப்­பட்ட  சம்­ப­வத்­தை­ய­டுத்து அப்­ப­கு­தியில் அமை­திக்கு பங்கம் ஏற்­ப­டுத்தும் வண்ணம் செயற்­பட்­ட­வர்­களும், ஜூலை 21 ஆம் திகதி மணல்­காடு பகு­தியில் கட­லோர பாது­காப்புப் பிரி­வினர் மீது தாக்­குதல் நடத்­தி­ய­வர்­களும் உள்­ள­டங்­கு­வ­தாக   சுற்­றி­வ­ளைப்பை நெறிப்­ப­டுத்­திய உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார். 

இத­னை­விட விஷேட அதி­ரடிப் படை­யி­னரின் பவல் வாகனம் மீது தாக்­குதல் நடாத்­தி­ய­வர்­களும் கைதா­னோரில் அடங்­கு­வ­தாக வட பிராந்­திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலு­வ­லகம் சுட்­டிக்­காட்­டு­கின்­றது. 

வட­மா­காண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்­ணான்­டோவின் உத்­த­ர­வுக்கு அமைய  சனிக்­கி­ழமை  அதி­காலை 4.00 மணி முதல் முற்­பகல் 9.00 மணி­வரை யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்­ணான்­டோவின் மேற்­பார்­வையில் இரு நாட்கள்  விஷேட சுற்­றி­வ­ளைப்­புக்கள் இடம்­பெற்­றன. 

இதன் போது , காங்­கே­சன்­துறை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் மாசிங்­கவின் நேரடி கட்­டுப்­பாட்டில் வட­ம­ராட்சி, துன்­னாலை கிழக்கு, தெற்கு பகு­தியை மையப்­ப­டுத்­தியும், யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஸ்ரெனிஸ்­லெஸின் நேரடி கட்­டுப்­பாட்­டிலும்  யாழ். பகு­தியை மையப்­ப­டுத்­தியும் சுற்றி வளைப்பு நடை­பெற்­றது. இதன்­போது பிராந்­திய பொலி­ஸா­ருக்கு மேல­தி­க­மாக பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டையின் வீரர்கள் 100 பேர் வரையில் சுற்றி வளைப்பு நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டனர்.

காங்­கே­சந்­துறை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சரின் மேற்­பார்­வையில் இடம்­பெற்ற சுற்றி வளைப்­புக்கள்  குட­வத்தை , வேம்­படி மற்றும் துன்­னாலை பகு­தி­களில் சுற்­றி­வ­ளைப்­புக்கள் தீவி­ர­மாக இடம்­பெற்­றி­ருந்­தன.

இதன் போது 52 பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யினர் ஆயுதம் தாங்கி சுற்­றி­வ­ளைப்­புக்­களை முன்­னெ­டுத்­த­துடன் மேலும் சில குழு­வினர் அவ­சியம் ஏற்­படும் போது அப்­ப­கு­தியை சுற்­றி­வ­ளைக்க தயார் நிலையில் வைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

இதன்­போது காங்­கே­சன்­துறை பொலிஸ் அத்­தி­யட்சர் பிரிவில் 13 பேர் கைது செய்­யப்ப்ட்­டனர். இத­னை­விட யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பகு­திக்கு உட்­பட்ட அல்வாய், யாழ். பகு­தியில் வைத்து 20 பேர் வரையில் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யி­னரின் பவல் வாகனம் மீது தாக்­குதல் நடத்­தியோர், கட­லோர காவல் படை­யி­னரின் மீது தாக்­குதல் நடாத்தி அவர்­களின் கட­மைக்கு இடை­யூறு விளை­வித்தோர், மணல் காடு பகு­தியில் இளைஞர் ஒருவர் பொலிஸ் துப்­பாக்கிச் சூட்டில் உயி­ரி­ழந்த பின்னர் பிர­தே­சத்தின் அமை­திக்கு பங்கம் ஏற்­படும் வகையில் ையில் பொலிஸ் காவலரணை உடைத்து, வீதிகளில் ரயர் எரித்து கலவரம் புரிந்தோர், பிடியாணை பிறப்பிக்கப்பட்டோர், குடி போதையில் வாகனம் செலுத்தியோர், தடை செய்யப்பட்ட கத்திகளை வைத்திருந்தோர், சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடியோர் ஆகியோர் அடங்குவதாக வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம்  தெரிவித்தது.