கதிர்காமத்தில் பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கதிர்காமத்தில் உள்ள மைதானம் ஒன்றில் பெரஹேராவை பார்க்க வந்த சிலர் உறங்கியுள்ளதை அடுத்து,

இதனை கவனிக்காத, பஸ்ஸின் சாரதி பஸ்ஸை பின்னோக்கி செலுத்தியபோது அங்கு உறங்கி கொண்டிருந்த மூவர் பஸ்ஸின் சில்லுகளில் சிக்கியுள்ளனர்.

இதில், படுகாயமடைந்த மூன்று பேரும் கதிர்காம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள், கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 18 மற்றும் 41 வயதான இரண்டு பேர் என தெரியவந்துள்ளது.

பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கதிர்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.