பொலன்னறுவை, ஹபரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திகம்பத்த பகுதியில் வேன் மோதியதில் 11 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ள நிலையில், வேனின் சாரதி ஹபரணை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் விபத்து தொடர்பில் விசாணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தளாய் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன் திகம்பத்த பிரதேசத்தில் வீதியை கடக்கமுற்பட்ட சிறுமி மீது மோதியதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.