வடக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது பதவியிலிருந்து இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர்களிடையேயான முக்கிய ஒன்றுகூடல் நேற்று மாலை இடம்பெற்றுள்ள நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு, கட்சியின் மாகாண உறுப்பினர்கள் குழுவின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட நிலையில் குறித்த இராஜிநாமா அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஒன்றுகூடலில் வடக்கு மாகாண முதலமைச்சரினால் மாற்றியமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்கேற்பதில்லையென முடிவெடுக்கபட்டதையடுத்து, வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது பதவி விலகலை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.