தொழில் அதிபர் ஒருவர் தன்னுடைய மனைவியின் உடல் அழகை வர்ணித்து தன்னை “வளைவுகள் நிறைந்த பெண்ணின் கணவர்” என இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளார்.

தன் மனைவியுடன் இருக்கும் படத்தை பதிவேற்றி ஒரு பெண்ணியவாதியாக தான் ஆன பின்னர் உடலில் நிறைய வளைவுகள் இருக்கும் பெண்களும் ஈர்ப்பு மிக்கவர்களாக இருக்கலாம் என்பதை தான் உணர்ந்ததாக விவரித்துள்ளார்.

மேலும் “நான் இந்தப் பெண்ணையும் அவளது வளைவான உடலையும் நேசிக்கின்றேன் உடல் எடை அதிகமுள்ள பெண்கள் மீதான ஈர்ப்பின் காரணமாக இளம் வயதில் என் நண்பர்கள் என்னை அடிக்கடி கேலி செய்தனர்” என்றும் குறித்த தொழில் அதிபர் பதிவிட்டிருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை பதவிட்ட இப்பதிவினை 18000 தடவைகளுக்கு மேல் பகிரப்பட்டுள்ளன.

குறித்த பதவினால் ஆத்திரமடைந்த பிரபல பத்திரிக்கையாளரான ஜூலியா புகாசேவ் “பெண்ணியம் என்பது வளைவுகளைக் கொண்ட பெண்கள் மீது ஈர்ப்பு கொள்வதல்ல” என்று சாடியுள்ளார்.

“ஒரு ஆணோ பெண்ணோ பிறரையும் தன்னையும் பார்க்கும் விதத்தை நீங்கள் மாற்றியுள்ளீர்கள் என்றால் நீங்கள் ஒரு அற்புதமான செயலை செய்துள்ளீர்கள் என்று பொருள்” என்று குறித்த பதிவிற்கு பதில் கருத்தை இன்ஸ்டாகிராம் பயனாளர் ஒருவர்  பதிவிட்டுள்ளார்.