நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழைக்காலநிலை ஓரளவு அதிகரிக்கக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Image result for மழை   virakesari

நாட்டின் ஊடாக விசேடமாக மத்திய மலைப்பிரசேத்திலும் வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் மேற்கு மற்றும் தெற்கு கரையோர பிரதேசங்களிலும் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும். மேற்கு சப்ரகமுவ,  மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சில பிரதேசங்களில் குறிப்பாக இரத்தினபுரி, கேகாலை, கண்டி, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மணிக்கு சுமார் 100 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.