பாலியல் தாக்­கு­தல்­க­ளுக்கு பெண்கள் பூசி­யி­ருந்த நறு­மணத் தைலங்­களே காரணம்

Published By: Robert

22 Jan, 2016 | 09:58 AM
image

ஜேர்­ம­னிய கோலொன் பிராந்­தி­யத்தில் கடந்த புது வருட தினத்தில் குழு­வொன்றால் பெண்கள் பாலியல் ரீதியில் தாக்­கப்­பட்ட சம்­ப­வத்­துக்கு அந்தப் பெண்கள் நறு­ம­ணத்­தை­லங்­களை பூசி­யி­ருந்­த­மையே காரணம் எனத் தெரி­வித்து அந்தப் பிராந்­திய இமாம் ஒருவர் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார்.

கடந்த புது வருட தினத்தில் கோலொன் நகரில் நூற்­றுக்­க­ணக்­கான பெண்கள் பாலியல் தாக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருந்­தனர்.

அன்­றைய தினம் மட்டும் அந்­ந­கரில் 3 பாலியல் வல்­லு­றவு சம்­ப­வங்கள் உட்­பட 521 பெண்­க­ளுக்கு எதி­ரான பாலியல் தாக்­குதல் சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன.

இத­னை­ய­டுத்து மேற்­படி சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­பட்­டி­ருந்த குற்­றச்­சாட்டில் வட ஆபி­ரிக்­காவைச் சேர்ந்த 21 குடி­யேற்­ற­வா­சி­க­ளிடம் பொலிஸார் தொடர்ந்து விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ளனர்.

இந்­நி­லையில் கோலொன் நக­ரி­லுள்ள அல் தவ்ஹீத் பள்­ளி­வா­சலைச் சேர்ந்த இமா­மான சமி அபு யூஸுப் அந்தப் பள்­ளி­வா­சலில் இடம்­பெற்ற போத­னையின் போது, மேற்­படி பாலியல் தாக்­கு­தல்­க­ளுக்கு அந்தப் பெண்கள் நறு­மணத் தைலங்களைப் பூசி­யி­ருந்­த­மையே காரணம் எனவும் அந்தத் தைலங்களே ஆண்களை தவறான எண்ணத்தால் தூண்டப்பட்டு தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தூண்டியிருந்தன எனவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right