பரீட்சார்த்திகள் இலத்திரனியல் மூலம் மோசடியில் ஈடுபட்டால் 5 வருட பரீட்சை தடை

Published By: Priyatharshan

07 Aug, 2017 | 08:52 AM
image

இம்முறை பரீட்சையின் போது பரீட்சார்த்திகள் இலத்திரனியல் உபகரணங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபட்டால் ஐந்து வருட பரீட்சை தடை விதிக்கப்படுமென பரீட்சை மத்திய நிலைய பொறுப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இம்முறை பரீட்சையின் போது பரீட்சார்த்திகள் ஸ்மாட் கைக்கடிகாரம், கையடக்க தொலைபேசி, இலத்திரனியல் உபகரணங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுகின்றார்களா என்பது குறித்தும் விசேட கவனம் செலுத்துமாறு பரீட்சை மத்திய நிலைய பொறுப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறான மோசடிகளில் ஈடுபடும் பரீட்சார்த்திகளுக்கு ஐந்து வருட பரீட்சை தடை விதிக்கப்படும். இம்முறை பரீட்சை பெறுபேறும் இவ்வாறானவர்களுக்கு இரத்து செய்யப்படும். 

பரீட்சை நடைபெறும் சந்தர்ப்பத்தில் வெளிநபர்களினால் பரீட்சார்த்திகளுக்கு தடை ஏற்படுத்தப்படுமாயின் அது தொடர்பாக பரீட்சை திணைக்களத்திற்கும் பொலிஸ் நிலையத்திற்கும் அறிவிக்குமாறு பரீட்சை மத்திய நிலைய பொறுப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அனுமதியற்ற எந்தவொரு நபருக்கும் பரீட்சை நடைபெறும் நேரத்தில் பரீட்சை நிலையங்களுக்குள் பிரவேசிக்க முடியாது. பரீட்சை மண்டபத்தில் எவரேனும் ஒருவர் மோசடி மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுவார்களாயின் அது தொடர்பாக மத்திய நிலைய பொறுப்பாளருக்கும் பெற்றோருக்கும் பரீட்சைத் திணைக்களத்திற்கும் அறிவிக்க முடியும். 

கிடைக்கப் பெறும் அனைத்து முறைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு விசேட குழு தயாராக உள்ளது. பரீட்சைகள் கண்காணிப்பு குழு நாடு முழுவதிலும் ஈடுபடுத்தப்படவுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56