சீன அர­சாங்­கத்தின் துறை­முக நகர் அபி­வி­ருத்­தியின் மீள் ஆரம்பம் மற்றும் சர்­வ­தேச நாணய நிதி­யத்துட­னான கலந்­து­ரை­யாடல் போன்­ற­வற்றின் மூலம் 2016 ஆண்டை வர்த்­தக துறையில் மாற்­றத்­துக்­கு­உரிய ஆண்­டாக மாற்ற எதிர்­பார்­த்துள்ளோம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

உலகப் பொரு­ளா­தார மாநாட்டில் கலந்­துக்­கொள்­வ­தற்­காக சுவிட்­ஸர்­லாந்­துக்கு சென்­றுள்ள பிர­தமர் அங்கு இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்­துக்­கொண்டு இந்த கருத்­தினை தெரி­வித்­துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,1.4 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான துறை­முக அபி­வி­ருத்தி நகர் மீள ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. இது பொரு­ளா­தா­ரத்தின் முக்­கி­ய­மான பங்­காற்றும் நிகழ்ச்சித்திட்டமாகும் அத்­தோடு குறித்த அபி­வி­ருத்தி திட்டம் மூலம் 2 ஆம் காலாண்டில் அம்­பந்­தோட்டை துறை­ மு­

கத்தின் வரு­மா­னத்தை அதி­க­ரிக்க முடியும். ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்­கத்தின் வட்­டி­வீ­தத்­திற்­கான அதி­க­ரிப்பு குறை­பா­டாக பல­ராலும் விமர்­சிக்­கப்­பட்­டாலும் அதனை நிவர்த்­திக்க எம்மால் முடிந்­துள்­ளது.

மேலும், நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் முன்­வைக்­கப்­பட்ட வரவு - செலவு திட்­டத்தின் மீள் திருத்­தங்­களும் பல மாற்­றங்­களும் பிற்­பட்ட காலப்­ப­கு­தியில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. இதன் மூலம் பொரு­ளா­தார ஸ்திரத்­தன்­மையை அடைந்­து­கொள்­வ­தற்காக சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் ஒத்­து­ழைப்பை பெற எதிர்­பார்த்­துள்ளோம். இதற்­கெனபரந்­துப்­பட்ட கலந்­து­ரை­யா­டல்­களில் ஈடு­பட்டு வரு­கின்றோம்.

உலக பொரு­ளா­தார மாநாட்டில்இதற்­கான ஆரம்­ப­கட்ட களந்­து­ரை­யா­டல்­களில் ஈடுப்­பட உள்ளோம்.

உலக பொரு­ளா­தா­ரத்தின் பல்­வேறு வகை­யான தளம்பல் நிலை­மை­களும் ஸ்திர­மற்ற போக்­கு­களும் இனங்­கா­ணப்­பட்ட வேளையில் சீன அரசு நுகர்வை அடிப்­ப­டை­யாக கொண்ட பொரு­ளா­தார முறை­மையை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. இலங்­கையில் கலந்­தா­லோ­சிக்­கப்­பட்ட பொரு­ளா­தார மாநா­டு­களில் குறித்த விடயம் தொடர்­பாக அதிக கவனம் செலுத்­தப்­பட்­டது. மேலும் தனியார் துறையின் வளர்ச்சி மற்றும் சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் செயற்­பாட்டு திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் உள்ள விளை­வுகள் தொடர்­பா­கவும் கலந்­தா­லோ­சிக்­கப்­பட்­டது.2016 ஆம் ஆண்டு எவ்­வா­றான மாற்­றங்­களை தரும் என்­ப­தனை யாராலும் அனு­மா­னிக்க முடி­யாது. அந்த வகையில் பொரு­ளா­தார ஸ்திர­மின்மை மற்றும் நிச்­சிய­மற்ற வர்த்­தக துறை என்­பன காணப்­ப­டு­கின்ற வேளையில் நாம் சர்­வ­தேச நாணய நிதி­யத்­துடன் ஒப்­பந்­தத்தை மேற்­கொள்ள உள்ளோம் என்­பது வியப்­புக்­குரிய ஒன்­றாகும்.

இலங்­கையின் உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை விருத்தி செய்­வதில் பல புதிய திட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்த உத்­தே­சித்­துள்ளோம்.

உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை விருத்தி செய்­வதில் சீன அர­சாங்­கத்தின் முத­லீட்டு கொள்­கைகள் மட்டும் போது­மா­ன­தாக அமைந்து விடாது. இதற்கு அமைய பல புதிய நாடு­களின் அபி­வி­ருத்தி கொள்­கை­களை உள்­ளீர்க்க திட்­ட­மி­ட்டுள்ளோம். மேலும் சொத்து சார் வார்த்­த­கத்தின் சீன அர­சாங்­கத்தின் பங்­க­ளிப்­பையும் எதிர்­பார்த்­துள்ளோம் என தெரிவித்துள்ளார்.