இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன். ஐவர் காயமடைந்துள்ளனர். இவர்களில் கவனயீனமாக வாகனம் செலுத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருணாகல் தம்புள்ளை வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று அதிகாலை வேளையில் குருணாகல் தம்புள்ளை வீதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் இறந்தவர்களும் தந்தையும் மகளும் என தெரியவந்துள்ளது.

மேற்படி விபத்தில் உயிரிழந்த பெண் செலுத்திச் சென்ற காரின் மீது எதிர்திசையில் வந்த மணல் ஏற்றிச் செல்லும் கன ரக டிபர் வண்டியொன்று மோதியமையே காரணம் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த விபத்தில் சிக்கிய பெண்ணின் கணவரும் இரு பிள்ளைகளும் கடுமையான காயங்களுக்கு இலக்கான நிலையில் குருணாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் இப்பாகமும் 7 கட்டை பகுதியை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பதும் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

அதேபாேல் அநுராதபுரம் நுவரவெவ பகுதியில் இடம்பெற்ற கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த நபர் கடும் காயங்களுக்கு இலக்காகியுள்ளார். மேற்படி காரானது முன்னால் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியை முந்திச் செல்வ முற்பட்ட போது எதிர் திசையில் வந்த வேனுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தின் பின்னர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்ததன் பின்னர் காரை செலுத்திச் சென்ற நபர் குடிபோதையில் இருந்தை அறிந்துள்ளனர்.  இதனையடுத்து அவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.