கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிலுள்ள காணடுகளில்  ஆபத்தான வெடிபொருட்கள் காணப்படுவதாக வனவள அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தங்களது  ஆளுகைக்குள் காணப்படுகின்ற  காடுகளில் பரிசோதனைக்காக சென்றபோதே அங்கு  ஆபத்தான வெடிபொருட்கள்  காணப்படுவதனை அவதானித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

வெடிக்காத நிலையில் காணப்படும் வெடிபொருட்கள்  மனிதர்களுக்கும் , விலங்களுக்கும் எவ்வேளையிலும் ஆபத்தை ஏற்படுத்தலாம் எனவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

எனவே உரிய தரப்பினா்  இவற்றை அடையாளம் கண்டு அகற்ற வேண்டும் எனவும்  அவா்கள் தெரிவித்துள்ளனா்.